search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போச்சம்பள்ளி வாரச்சந்தை"

    • பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.

    மத்தூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வருகிற 12-ந்தேதி அன்று தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின.

    சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×